Wednesday, September 27, 2006

Variyar Nagaichuvai

வாரியாரின் நகைச்சுவை


திருமுருக கிருபானந்த வாரியாரின் நுhற்றhண்டு விழா கொண்டாடப்படுகின்ற நேரத்தில் வாரியார் சுவாமிகளின் இலக்கிய சொற்பொழிவுகளில் அதிகமாக மின்னும் நகைச்சுவை அதிலும் சிலேடை வகை நகைச்சுவை அவாpன் தனித்தன்மை கொண்டது. அதைப்பற்றி சற்றே இங்கு நோக்குவோம்.


வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு கேட்க வரும் சிறhர்களை ஊக்குவிக்கும்பொருட்டு அவ்வப்போது அவர்களிடம் சிறு சிறு கேள்விகள் கேட்டு பாpசாக புத்;கங்கள் அளிப்பார்கள். அதற்காகவே சிறுவர்கள் முதல்வாpசையில் அமர்ந்து அவர்கேட்கும் கேள்விகளாளுக்;காக காத்துஇருப்பர். ஒருசமயம் ஒருசிறுவனிடம்; கேள்விகேட்டு பதிலளித்த அவனிlம் தன்னிருக்கையிலிருந்தே ஒரு புத்தகத்தை போட அவன் அதை பிடித்துக்கொள்ளும் பொருட்டு அவனிம் போட்டா(ல்) புடிச்சுக்;கனும் என்று கூறிவிட்டு அருகிலிருந்த புகைப்படம் எடுப்பவரையும் பார்த்து போட்(n)டா பிடிச்சிக்கனும் என்று அச்சிறுவன் புத்தகத்தை பிடித்து கொள்ளுவதை போட்டோ எடுத்துக்கொள்ளும்படி நகைச்சுவைமிளிர சுவாமிகள் கூறியதைகேட்டு அனைவரும் ரசித்தனர்.


ஒருசமயம் இராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாரீசன் மாயமான் வடிவம் எடுத்து இராமன் இல்லாத நேரத்தில் சீதையை கவர்ந்து செல்லவிருந்த நிகழ்ச்சியை


மாயமான்ஆகினான் - மாயம் செய்விக்கும் பொன்மான் வடிவுஎடுத்து வந்தான் (சீதையை கவர்ந்து செல்லும் நோக்கில்)


மாய-மான் ஆகினான் - இராமன் பானத்தால் மாய(இறந்து போக) மான் வடிவு எடுத்து வந்தான்


மா-யமான் (எமன்) ஆகினான் - இராமனை கொல்லும் நோக்கத்தில் மா(பொpய) எமனாகி வந்தான்


என்று ஒரே வார்த்தை பலபொருள்படும் நோக்கில் கூறி அனைவரையும்; ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.